வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படும் சௌசௌ !!

பல்வேறு ஊட்டச்சத்துகள் கொண்ட சௌசௌ உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. இது ஹைபர் டென்ஷனை குறைக்கிறது. 

ஆரோக்கியமான உணவு பட்டியலில் இதனை தினமும் சேர்த்துக் கொள்ளலாம். உணவுக் கட்டுபாட்டில் இருக்கும் நேரத்தில், தினமும் காலை உணவிற்கு முன் இந்த காயை எடுத்துக் கொள்ளலாம்.
 
உடலில் கொழுப்பு அளவு குறைவதுடன், சௌசௌ உட்கொள்வதால், உடலின் கொலஸ்ட்ரால் அளவும் குறைகிறது. மதிய உணவு மற்றும் இரவு உணவின் போது சௌசௌ உட்கொள்வதால் உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
 
சௌசௌ எடுத்துக் கொள்வதால், இதில் இருக்கும் அதிகளவு நார்ச்சத்தின் காரணமாக உங்கள் செரிமான மண்டலம் மென்மையாக அதன் செயலை மேற்கொள்கிறது. செரிமான மண்டலம் சீராக இயங்க இந்த காய் மிகவும் அவசியம்.
 
உடல் நலத்திற்கு பெரும் நன்மைகளைச் செய்யும் ஒரு காய் இந்த சௌசௌ. இதில் இருக்கும் வைட்டமின் சி, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது.
 
உணவுக் காட்டுப்பாடிற்கு மட்டும் இல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் இந்த காயை பயன்படுத்தி பலன் அடையலாம். கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், ஹைப்பர் டென்ஷனைக் குறைக்கவும், இதய நோயைத் தடுக்கவும் சௌசௌ உதவுகிறது.