Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடர்த்தியான புருவங்களை பெற சில இயற்கை வைத்திய குறிப்புகள் !!

Written By Sasikala
Updated: வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (09:45 IST)

முட்டையின் மஞ்சள் கருவில் புரதச்சத்து மற்றும் பயோடின் என்னும் சத்து அதிகம் இருப்பதால், புருவம் வளர மிகவும் உதவுகிறது. முட்டையின் மஞ்சள் கருவை  ஒரு தூரிகையின் உதவியுடன் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். இது உங்கள் புருவங்களை அடர்த்தியாகவும், கூந்தல் உதிர்வதற்கான வாய்ப்புகளையும்  குறைகிறது. 
 
வைட்டமின் பி, சி ஆகியவை உள்ளதால் புருவம் நன்றாக வளரும். மயிர்கால்களை நன்றாக உறுதியாக்குகிறது. வெங்காயத்தை தோள் உரித்து, ஜூஸ் செய்து, அதை தடவினால் போதும். வெங்காயம் ஒரு வாசனை கொடுக்கும் என்பதால், சிறிது எலுமிச்சை சாறு கலந்து தடவலாம்.
 
8. தேங்காய் எண்ணெய்யில் உள்ள லாரிக் அமிலம், ஆன்டி-மைக்ரோபையல் தன்மை கொண்டதால், முடிக்காலில் இன்பெக்ஷன் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.  வாரத்தின் சில நாட்கள் பயன்படுத்தினாலே நல்ல பிரதிபலன் கிடைக்கும். இரவு தூங்கும்முன் புருவங்களில் தடவிக்கொண்டு தூங்கலாம்.
 
விளக்கெண்ணெய்யை தினமும் புருவங்களில் பயன்படுத்தினால், அடர்த்தியான, கருமையான புருவங்கள் வளரும். விளக்கெண்ணெய்யில், புரதச்சத்து,  ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் புருவத்தின் வேருக்கு நல்ல ஊட்டச்சத்து அளிக்கிறது. 
 
தினமும், புருவத்தை நன்றாக மசாஜ் செய்யுங்கள். இதுவும் இரத்த ஓட்டத்தை சீராக்கும். கிரீம், லோஷன் போன்ற ரசாயனங்களை தவிருங்கள். புருவம் வளருவதை  இது பாதிக்கும். பயோட்டின் என்ற வைட்டமின் புருவம் வளர ஏதுவான சத்து ஆகும்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments