Daily Horoscope
✕

இயற்கை மருத்துவத்தில் நோய்களுக்கான தீர்வுகள்!

Updated: வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (12:28 IST)
 
கால் கப் பாலில் ஆறு பாதாம் பருப்பை சேர்த்து மூன்று மணி நேரம் வரை ஊறவைத்து, எலுமிச்சை சாறு சேர்த்து அரைக்கவும். அதை முழங்கை, முழங்காலில் தடவி பத்து நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் அங்கு இருக்கும் கருமை மறைந்துவிடும்.
 
எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் உள்ள வைட்டமின் ‘சி’ உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்கும்.
 
பிரண்டைத் தண்டுகளைக் கணு நீக்கித் துவையல் செய்து சாப்பிடலாம். பிரண்டையில் உள்ள பைட்டோஸ்டீரால் மற்றும் நார்ச்சத்து கொழுப்பைக் குறைக்கும்.
 
நாயுருவி வேரைப் பொடித்து நான்கு பங்கு நீர்விட்டு, ஒரு பங்காக வற்றவைத்து அருந்தினால், சிறுநீரைப் பெருக்கி பித்த அமிலங்களை வெளியேற்றும். கல்லீரலின் கொழுப்பை குறைக்கும்.
 
அருகம்புல் சாறுடன் பால் சேர்த்து அருந்தினால், அதில் உள்ள பீட்டா சிட்டோஸ்டீரால் வைட்டமின் சி, பீட்டா கரோடின் ஆகியவை உயர் ரத்த அழுத்தத்தை  குறைக்கிறது.

எல்லாம் காட்டு

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments