Daily Horoscope
✕

ஆண்களின் சரும பிரச்சனைகளை அடியோடு போக்கும் கற்றாழை...!!

Written By Sasikala
Updated: சனி, 16 மே 2020 (12:11 IST)

ஒரு பௌலில் சிறிது கற்றாழை ஜெல்லுடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில்  தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைத்து பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கால் சருமத்தில் உள்ள கருமை நீங்கி, முகம்  பொலிவோடு மின்னும்.
 
கற்றாழை ஜெல்லை அத்துடன் சிறிது மாம்பழக் கூழ் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு பிளெண்டரில் போட்டு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த  கலவையை முகம் முழுவதும் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு முகத்தை நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கால் முகம் புத்துணர்ச்சியுடன்  இருப்பதோடு, பிரகாசமாகவும் இருக்கும்.
 
கற்றாழை இலைகளை எடுத்து, நீரில் போட்டு சிறிது நேரம் வேக வைத்து, பின் அதை அரைத்து பேஸ்ட் செய்து, சிறிது தேன் கலந்து கொள்ள வேண்டும். பின்பு  அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். கோடைக்காலத்தில் இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போட்டால், சருமம் பளிச்சென்று காணப்படும்.
 
கற்றாழை ஜெல்லுடன், சிறிது வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். அதன் பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினந்தோறும் செய்து வந்தால், சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

எல்லாம் காட்டு

ஆண்களின் விந்தணுவை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் எது? - வாங்க பார்ப்போம்

ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை - விஞ்ஞானிகள் தீவிரம்...

எந்த நோய்க்கு எந்த தண்ணீர் சிறந்தது? - வாங்க பார்ப்போம்..

தினமும் ஒரு பப்பாளி!.. உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!..

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

அடுத்த கட்டுரையில்
Show comments