ஆண்களின் சரும பிரச்சனைகளை அடியோடு போக்கும் கற்றாழை...!!
கற்றாழை ஜெல்லுடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினந்தோறும் செய்வதன் மூலம், சருமத்தில் முதுமைத் தோற்றத்தைத் தரும் சுருக்கங்கள் மறையும்.
ஒரு பௌலில் சிறிது கற்றாழை ஜெல்லுடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைத்து பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கால் சருமத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பொலிவோடு மின்னும்.
கற்றாழை ஜெல்லை அத்துடன் சிறிது மாம்பழக் கூழ் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு பிளெண்டரில் போட்டு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகம் முழுவதும் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு முகத்தை நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கால் முகம் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, பிரகாசமாகவும் இருக்கும்.
கற்றாழை இலைகளை எடுத்து, நீரில் போட்டு சிறிது நேரம் வேக வைத்து, பின் அதை அரைத்து பேஸ்ட் செய்து, சிறிது தேன் கலந்து கொள்ள வேண்டும். பின்பு அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். கோடைக்காலத்தில் இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போட்டால், சருமம் பளிச்சென்று காணப்படும்.
கற்றாழை ஜெல்லுடன், சிறிது வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். அதன் பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினந்தோறும் செய்து வந்தால், சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.