திங்கள், 25 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சித்தர் கூற்றுப்படி நோயின்றி வாழ என்ன செய்ய வேண்டும்...?

உடலுக்கு ஒத்துவராத அல்லது ருசியின் காரணமாய் தேவைக்கு அதிகமாய் உணவருந்தினால் மட்டுமே உடலுக்கு நோய்  வருகிறது.

 
வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவர்கள் வரையறுத்துள்ள இம்மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும்  குறைந்தாலும் நோய் உண்டாகும்.
 
பசுவின் பாலையே அருந்த வேண்டுமாம். எண்ணெய்த் தன்மையுடைய உணவுகளை உட்கொள்ளும் நாட்களில் வெந்நீரில் குளிப்பதும், குடிப்பதும் உடலுக்கு நன்மை கொடுக்குமாம்.
 
ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று  குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.
 
கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி  ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம். 
 
* நாளொன்றுக்கு 2 முறை உணவு கொள்ள வேண்டும். பசித்தப்பின் உணவருந்த வேண்டும்.
* இரவில் மட்டும் உறக்கம் கொள்ள வேண்டும்.
* மாதம் ஒரு முறை புணர்ச்சி கொள்ளவும். பகலில் பணர்ச்சி கூடாது.
* புளித்த தயிரையே உண்ண வேண்டும்.
* பசும் பாலையே உண்ண வேண்டும்.
* எண்ணெயிட்டு தலை முழுகும்போது வெந்நீரில் குளிக்கவேண்டும்.
* வாசனைப் பொருட்களையும் பூக்களையும் இரவில் முகருதல் கூடாது.
* இரவில் விளக்கு, மரம், மனிதர் இவைகளின் நிழல்களில் தங்கக் கூடாது.