Daily Horoscope
✕

விரைவில் தொப்பையை குறைக்க சில எளிய குறிப்புகள்...!

Updated: புதன், 1 மே 2019 (11:36 IST)
 
இஞ்சிசாறு ஒரு டம்ளர் மற்றும் தேன் இரண்டு டம்ளர் இதனை இரண்டையும் நன்றாக கொதிக்க வைத்து எடுத்து வைத்துக் கொள்ள  வேண்டும். இதனை காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் மற்றும் மாலை நேரம் ஒரு ஸ்பூன் குடித்து வரவேண்டும்.  இவ்வாறு தொடர்ந்து 40 நாட்கள் செய்ய நல்ல மாற்றத்தை உணரலாம்.
 
இஞ்சியை சாறெடுத்து அதில் நெல்லிக்காய் சாறை கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும். வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் மெலியும்.
 
தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது  உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும்.
 
எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.
 
உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

எல்லாம் காட்டு

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments