திங்கள், 6 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ள செவ்வாழை !!

செவ்வாழையில் பீட்டா-கரோட்டீன் மற்றும் விட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.

பீட்டா-கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது விட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
 
செவ்வாழை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.
 
இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலைத் தடுக்கும். மேலும் இது உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். 
 
சிறுநீரக பிரச்சனைகள் ஏதும் வராமலிருக்க தினமும் ஒரு செவ்வாழையை உட்கொண்டு வாருங்கள். செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு.
 
எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் ஒரு செவ்வாழையை காலையில் உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் எடுக்காமல் இருக்கும். 
செவ்வாழையில் உள்ள விட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தணுக்களின் அளவை சீராகப் பராமரிக்கும்.
 
எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க விரும்பினால் தினம் ஒரு செவ்வாழையை சாப்பிடுங்கள். நெஞ்செரிச்சலால் கஷ்டப்படுபவர்கள் தினமும் செவ்வாழையை உட்கொண்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். எப்படியெனில் இதில் இயற்கையாக ஆன்டாசிட் தன்மை உள்ளது. இதனால் இப்பழத்தை தினமும் உட்கொண்டு வர நெஞ்செரிச்சல் பிரச்சனை நீங்கும்.