1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 9 டிசம்பர் 2021 (17:51 IST)

திருநீற்றுப்பச்சிலை மூலிகையின் அற்புத பயன்கள் !!

திருநீற்றுப்பச்சிலை, கற்பூரவள்ளி, மஞ்சள் கரிசாலை, மிளகு, திப்பிலி இவற்றை சேர்த்து, அரைத்து சிறு மாத்திரைகளாக்கி, உட்கொண்டு வர தொண்டை சதை வளர்ச்சி கரையும்.

திருநீற்றுப் பச்சிலை வேர் துளசி வேர், அவரி வேர், மிளகு, சித்தரத்தை, கண்டங்கத்திரி இவற்றைச் சம அளவு எடுத்து ஒன்று இரண்டாக நறுக்கி, நீர் விட்டு காய்ச்சிக் குடித்துவர எவ்வகையான ஜுரமும் குணமாகும்.
 
திருநீற்றுப்பச்சிலை விதைய, நீரில் ஊறவைத்து, சர்க்கரை சேர்த்து உட்கொண்டு வர, ஜுரம் வாந்தி ஆகியவற்றை குணமாக்கும்.
 
திருநீற்றுப் பச்சிலையுடன், பச்சை மஞ்சள் சேர்த்து, அரைத்து முகத்தில் பூசிவர முகப்பரு, கரும்புள்ளிகள் நீங்கி முகம் மிருதுவடையும்.
 
திருநீற்றுப்பச்சிலையை அரைத்து முகத்தில் பூசி உலர்ந்த பின் கழுவிவர முகத்தில் உள்ள மாசு மருக்கள் நீங்கி, முகம் பிரகாசமடையும்.
 
திருநீற்றுப்பச்சிலை உடன் கற்பூரம் சேர்த்து மூக்கில் உறிஞ்ச, தலை வலி, தலை பாரம் தீரும். திருநீற்றுப்பச்சிலையை முகர்ந்தால் தலை வலி, தூக்கமின்மை குணமாகும்.
 
திருநீற்றுப்பச்சலை, துளசிச்சாறு, பசும்பால் நெய், ஆமணக்கு எண்ணெய், இவற்றை வகைக்கு நூறு மில்லி எடுத்து கலந்து கொள்ளவும்.
 
இதனுடன் சாதிக்காய், விளாமச்சி வேர், வகைக்கு மூணு கிராம் எடுத்து பால் பால் விட்டு அரைத்து, கலந்து காய்ச்சி வடித்து தலைக்கு குளித்து வர, மண்டை புத்து, தலை வலி, போன்ற நோய்கள் குணமாகும்.
 
அரிசியில் திருநீற்றுப் பச்சிலையை கலந்து சாதம் வடித்து, எட்டு மணிநேரம் கழித்து சாப்பிடவும். இதனை தொடர்ந்து செய்து வர நாலு நாட்களில் உடல் சூடு தணியும்.