Daily Horoscope
✕

ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட பீர்க்கங்காய் !!

Written By Sasikala
Updated: திங்கள், 4 ஜனவரி 2021 (10:31 IST)

பீர்க்கங்காய் சாறு எடுத்து அரை டம்ளர் சாறுடன் போதிய சர்க்கரை சேர்த்து தினம் இரு வேளை குடித்து வருதலால் ஆஸ்துமா எனும் மூச்சு முட்டுதல் குணமாகும். 
 
பீர்க்கங்காயை சிறு சிறு துண்டுகளாக்கி வெயிலில் காய வைத்து, இடித்து பொடியாக்கி வைத்துக் கொண்டு, அதை சாதம் வடித்த கஞ்சியோடு கலந்து, குழைத்து தலைமுடிக்குத் தேய்த்து 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளித்து வந்தால் இளநரை நீங்கும். தலைமுடியும் மென்மையாகவும் பளபளப்பாகவும்  மாறும்.
 
பீர்க்கங்காயின் இலைகளை மைய அரைத்து அதனோடு பூண்டை நசுக்கிச் சாறு எடுத்து சேர்த்து தொழு நோயின் மேலே பூசி வந்தால், தொழு நோய்ப் புண்கள்  விரைவில் ஆறும்.
 
பீர்க்கங்காய் இலைகளை அரைத்து, சொறி, சிரங்கு நாள்பட்ட புண்களில் பற்று போட்டால் அவை சீக்கிரமே குணமாகும். இதே போல், பீர்க்கங்காயின் சதைப்  பகுதியை நன்றாக நசுக்கி காயங்களின் மேல் வைத்தால், காயம் சீக்கிரம் ஆறும். பீர்க்கை நார் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, ஆரோக்கியமாக வைக்க  கூடியது.

எல்லாம் காட்டு

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments