1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

முகத்தை அழகாக்கும் சில எளிய இயற்கை அழகு குறிப்புகள்...!!

தக்காளியை மிக்சியில் போட்டு அதனை ஜூஸாக்கி அதை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கடலைமாவு போட்டு கழுவினால் முக  பளபளப்பு அடையும்.

நன்கு கனிந்து பழுத்த நிலையில் இருக்கும் வாழை பழத்தை கூழாக்கி அதை முகத்தில் தேய்த்து ,அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முக பளபளப்பு  கூடும்.
 
பாதாம் பருப்பை அரைத்து  தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர முகம் பளப்பளப்பாகும். உருளைக்கிழங்கு சாறுடன் கடலைமாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும்.
 
கஸ்தூரி மஞ்சள் தூளை பன்னீரில் கலந்து வெயிலில் வைத்து சூடாக்கி, அதை முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பருக்கள்  மாயமாகிவிடும். செம்பருத்தி இலை, பயத்தம் பயறு இவற்றை சம அளவாக எடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் பூசிவந்தால் முகம் பளபளக்கும்.
 
அகத்திக் கீரையை தேங்காய் பால் விட்டு அரைத்து முகம் மற்றும் உடல் முழுவதும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் முகமும், உடலும் வசீகரமாகும்.
 
தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பான சூடேற்றி, தலைக்கு தடவி நன்கு 20 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊறவைத்து குளித்தால், முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, அடர்த்தியாகவும் வளரும்.