Daily Horoscope

தயிரில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்.....!!

Written By Sasikala
Updated: திங்கள், 13 ஜனவரி 2020 (12:18 IST)
 
பாலில் இருந்து தயாரிக்கப்படும் மற்ற பொருட்களை விட தயிரில் அதிக அளவு கால்சியம் உள்ளது. எனவே தயிரை உண்பதால் எலும்புகள்  மற்றும் பற்கள் வலுவடைகின்றன. மேலும் எலும்பு தேய்மானம் போன்ற நோய்கள் வருவதையும் தயிர் தடுக்கிறது.
 
தயிரில் உள்ள பூஞ்சை எதிர்ப்புத் திறன் தலைமுடியில் உள்ள பொடுகை அழிக்கும். எனவே தலையில் தயிரை சிறிது நேரம் தடவி, காயவைத்த பின்னர் கழுவி வந்தால் பொடுகுத் தொல்லை குறையும்.
 
தயிர் உங்கள் மூளையின் செயல்பாட்டை மந்தப்படுத்துவதால், கோபம், மன அழுத்தம் ஆகியவை குறைக்கப்படுகிறது. தயிர் சாப்பிட்டால் தூக்கம் வரும் என கூறுவது இதன் காரணமாகத்தான்.
 
தயிரை தினந்தோறும் உண்டு வந்தால் இதயத்தில் உள்ள ரத்த ஓட்ட நாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. இதனால் இதய  நோய்களுக்கான வாய்ப்பும் குறைகிறது.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments