1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 11 ஜூலை 2022 (14:31 IST)

சோயாபீன்ஸில் நிறைந்துள்ள சத்துக்களும் பலன்களும் !!

Soybeans
சோயாபீன்ஸ் சாப்பிடுவதால் உடல் உறுப்புகளை சுற்றி கொழுப்பு படிவதை தடுக்கிறது. சோயா பீன்ஸில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


உடல் எடையை குறைக்க விருப்பம் உள்ளவர்கள் கண்டிப்பாக சோயா பீன்ஸினை எடுத்துக் கொள்வது அவசியம்.

சோயா பீன் புரதங்கள், உணவுப் பொருள், மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவற்றின் மிகச் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.

புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதில் சோயா முக்கிய பங்காற்றுகிறது.

எலும்பு முறிவு ஏற்பட்ட ஒருவர் தொடர்ந்து சோயா பீன்ஸினை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

சோயா பீன்ஸில் பாஸ்பரஸ், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இது எளிதில் செரிமானமடையக்கூடியது.

சோயா பீன்ஸ்களில் உள்ள ‘ஐசோஃப்ளேவோன்கள்’ நீரழிவினை ஏற்படுத்தும் காரணிகளை கட்டுப்படுத்துகிறது. எனவே நீரழிவு நோயாளிகள் அடிக்கடி சோயா பீன்ஸ் சாப்பிடலாம்.

சோயாபீனில் கரையாத நார்ச்சத்து உள்ளது. இதை அதிகமாக சாப்பிடுவது வாயு மற்றும் வயிற்றுப்போக்கு அபாயத்தை அதிகரிக்கலாம். எனவே இதனை அளவுடன் எடுத்துக்கொள்வது நல்லது.