வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

சமையலுக்கு மட்டுமல்லாமல் நோய்களுக்கும் தீர்வு தரும் கசகசா...!

வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால்  வயிற்றுப்போக்கு குறையும்.
கசகசா உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக்கூடியது. கோடை காலத்தில் உண்டாகும் வாய்புண்களை நீக்கும் சக்தி இதற்கு இருக்கிறது. வயிற்று  புண்களையும் குணப்படுத்தும்.
 
கசகசாவின் வெளிப்புற உறையில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் அது மலச்சிக்கலைத் தடுக்க உதவுவதோடு, சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
 
கசகசாவிற்கு நோய்த்தடுப்பாற்றலையும், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றலும் உண்டு. மேலும் சருமத்தில் தேமல், கரும்புள்ளிகள்  இருந்தால் கசகசாவை தேங்காய்பாலில் அரைத்து அதில் பூசவேண்டும்.
கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். அதிலுள்ள ஒலியீக் ஆசிட், லினோலியிக் ஆசிட் போன்ற அமினோ  அமிலங்கள் மாரடைப்பைத் தடுத்து, பக்கவாதத்தில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
 
கசகசா விதை தயாமின், பண்டோதேனிக் அமிலம், ரைபோ பிளேவின், போலிக் அமிலம் போன்ற வைட்டமின்களுக்கு மிகச்சிறந்த ஆதாரமாக  விளங்குகிறது.
 
கசகசா ஆண்மை சக்தியை அதிகரிக்கும். நரம்பு இயக்கங்களை சீர்படுத்தி இரவில் ஆழ்ந்த தூக்கத்தையும் தரும். மூளைக்கும் புத்துணர்ச்சி கிடைக்கச்செய்யும். நரம்பு செல்களில் உற்பத்திக்கும் உதவும்.