Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுநீர் பிரச்னைகளுக்கு தீர்வு தரும் நெருஞ்சில் செடி !!

Written By Sasikala
Updated: செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (11:49 IST)

நெருஞ்சில் கஷாயத்துடன் சுக்கு சேர்த்து காலையில் பருகினால் ரூமாட்டிஸம், இடுப்பு வலி குறையும். நெருஞ்சில் இதயத்திற்கு நல்லது. ரத்தக்குழாய்களை  விரிவடையச் செய்து சீராக இரத்த ஒட்டம் இயங்க உதவும்.
 
நெருஞ்சி இலையை வெள்ளாட்டு பாலுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, தேன் சேர்த்து குடித்துவர ஆண்மை அதிகரிக்கும். நெருஞ்சி செடியை நிழலில் உலர்த்தி  சூரணம் செய்து 2 கிராம் அளவு பாலுடன் கலந்து காலை மாலை இருவேளை குடித்து வர வெட்டை நோய் குணமாகும்.
 
சிறுநீரகக் கோளாறு, சிறுநீரகக் கல் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படும். கர்ப்பிணி பெண்கள், நெருஞ்சி முள்ளை சுடுநீரில் கொதிக்க வைத்து கசாயமாக உட்கொண்டால் சிறுநீர் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
 
சிறுநீரக கல் அடைப்பு நெருஞ்சி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர சிறுநீரில் ரத்தம் வெளிப்படுதல் குணமாகும்.  விதையினை அவித்துக் காயவைத்துத் தூளாக்கி இளநீருடன் உட்கொண்டால் சிறுநீர் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.

எல்லாம் காட்டு

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

அடுத்த கட்டுரையில்
Show comments