செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தலைமுடி அடர்த்தியாக வளருவதற்கான இயற்கை குறிப்புகள்....!!

கூந்தல் வறண்டு இருந்தால் ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய்யும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.
நெல்லிக் காயையும் ஊறவைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊறவைப்பது குளிர்ச்சியைத் தரும்  கண் எரிச்சலைப் போக்கும்.
 
தலையில் என்பவர்கள் சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊறவைத்து தேய்த்துக்கொள்ளலாம்.
 
பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்துப் பொடி செய்து பசும் பாலில் குழைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் விரைவில் குணம் தெரியும்.
 
தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்தத் தேங்காய் எண்ணெய்யில் காயவைத்து செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களையும் பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் முடி கறுப்பாக வளரும்.
 
தினமும் உச்சந்தலையில் ஒரு விரல் சுத்தமான விளக்கெண்ணெய்யைத் தடவி வந்தால் கண்ணுக்குக் குளிர்ச்சி தருவதோடு முடியும் உதிராது.
 
தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக் கொள்ளும்போது சீயக்காய்த் தூளுடன் தண்ணீருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கிவிடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.