1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கண் பார்வையை அதிகரிக்க உதவும் சில இயற்கை குறிப்புகள்...!!

கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் முன் அமர்ந்து நீண்டநேரம் வேலை செய்வது மட்டுமல்லாமல், மீதி நேரத்தில் செல்போனை பார்த்துக்கொண்டிருப்பதால், கண் பார்வையில் குறைபாடு ஏற்படுகிறது. 
கண்ணாடி போடுவது ஸ்டைல் என்று நினைத்துக் கொள்பவர்களும் உண்டு. அதுவே நாளாக நாளாக பெரிய தலைவலியாகிவிடும். மோசமான  உணவுப் பழக்கத்தாலும், நாம் சாப்பிடும் உணவில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல், கண் ஆரோக்கியம் பாதிப்படைகிறது. 
 
ஒரு கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வையுங்கள். அடுப்பை அனைத்து பின் குங்குமப்பூ சேர்த்து சிறிது நேரம் மூடி வையுங்கள். பிறகு  வடித்து, தேன் கலந்து பருகினால் போதும்.
 
நன்மைகள்: இந்த தேநீரை பகலில் ஒரு வேளை அருந்தலாம். பார்வையை மேன்படுத்துவது மட்டுமல்லாமல், உடலில் ரத்த ஓட்டத்தை  சீராக்கும். ஆர்தரைட்டிஸ் நோயினால் ஏற்படும் வலியை குணப்படுத்தும். ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரிக்கும்(improve).
 
சோம்பு, பாதாம் இரண்டையும் சரிசமமாக எடுத்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சக்கரை சேர்த்துக்கொள்ளலாம். இந்த மூன்றையும் மிக்ஸி  ஜாரில் சேர்த்து நன்றாக பவுடர் போல அரைத்துக்கொள்ளுங்கள். இரவு தூங்குவதற்குமுன், பாலில் ஒரு தேக்கரண்டி இந்த பவுடரைக் கலந்து  பருகுங்கள். 
 
நன்மைகள்: கிட்டப் பார்வை, தூரப்பார்வை, கேட்ராக்ட் பிரச்சனை எதுவாக இருந்தாலும், 40 நாட்கள் இந்த செய்முறையை பின்பற்றி வந்தால்  நல்ல தீர்வு கிடைக்கும். 
 
கண்களில் படும் தூசினால் ஏற்படும் பாதிப்பைப் போக்க வைட்டமின் ஏ, பி, சி, ஈ இரும்புச்சத்து, ஜிங்க், லூடைன் போன்ற அணைத்து வைட்டமின் சத்துக்களும் இதில் இருக்கிறது.
 
கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ, பீட்டா கரோடின் உங்கள் கண் பார்வையை சீராக வைக்க உதவும்.
 
ப்ரோக்கோலி கண்களில் படும் அதிக வெளிச்சத்தினால் கண்களுக்கு ஏற்படும் அழுத்தத்தினால் உண்டாகும் பார்வைக்கோளாறை சரி செய்யும் ப்ரோக்கோலி . இதில் வைட்டமின் பி, லூடைன் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கிறது.