புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (16:57 IST)

செரிமான பிரச்சனைகளை குணமாக்கும் புதினா டீ !!

Mint
புதினாவில் புரோட்டீன், நீர்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் எ, அயர்ன், நிக்கோடின் ஆக்ஸீட் மற்றும் டைமின் என பலவகையான சத்துக்கள் இதில் அதிக அளவு உள்ளது.


புதினா சட்னி, புதினா ஜூஸ், புதினா டீ, புதினா கசாயம், புதினா சூப் என எவ்வாறு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். புதினாவை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். இதில் எலுமிச்சை ஜுஸ் கலந்து குடித்து வந்தால் பித்தம் குறையும்.

புதினா அதிக அளவு கொழுப்பை குறைக்கிறது. எனவே, உடல் எடையை குறைப்பதற்கு புதினா பெரிதும் உதவுகிறது. கர்பிணி பெண்களுக்கு குமட்டல் மற்றும் வாந்தி இருக்கும். இதில் இருந்து விடுபட புதினாவை துவையல் செய்து சாப்பிட்டாலே போதுமானது.

புதினாவோடு இஞ்சி சாறு, எலுமிச்சை ஜுஸ், உப்பு போன்றவற்றோடு சிறிது தண்ணீர் சேர்த்துக் குடித்து வந்தால் செரிமான பிரச்சனை குணமாகும். பல் மற்றும் வாய் பிரச்சனைகளை குணப்படுத்த புதினா பெரிதும் உதவுகிறது. புதினாவை வாயில் போட்டு மென்றால் போதுமானது, வாய் பிரச்சனைகளைக் குணமாக்கும்.

புதினா டீ குடித்தாலே வரட்டு இருமல் குணமாகும். எனவே, வரட்டு இருமல் இருப்பவர்கள் புதினாவை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும், சிறுநீரகப் பிரச்சனை மற்றும் முகப்பரு பிரச்சனை ஆகியவற்றையும் குணப்படுத்த பெரிதும் உதவுகிறது.