திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 26 மார்ச் 2022 (12:42 IST)

கருங்காலி மரத்தின் மருத்துவ குணங்களும் பயன்களும் !!

கருங்காலி வயிற்றில் உள்ள புண்களை ஆற்றி, அல்சர் பிரச்சனையை தீர்க்க வல்லது. மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற வாய் பிரச்சனைகளையும் குணப்படுத்தும் மருத்துவம் மருத்துவகுணம் கொண்டது.


ஒரு பங்கு கருங்காலிக் கட்டையை எடுத்து எட்டு மடங்கு நீரை சேர்த்து நன்றாக காய்ச்சி அதில் கடுக்காய் தான்றிக்காய் நெல்லிக்காய் போன்றவைகளை சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து பின் ஆற வைத்து வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும் அந்த நீரை அருந்தி வர உடலிலுள்ள  கெட்ட நீரான விஷநீர் வெளியேறும். மற்றும் சளி காய்ச்சல் நெஞ்சு சளி  போன்றவற்றை வெளியேற்றி உடலில் உள்ள கழிவுகளை அகற்றி உடம்பை  சீர்படுத்தும்.

இதை உபயோகித்து வந்தால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு சீர்படும் மாற்றம் உடம்பிலுள்ள இரும்புச்சத்தை அதிகரிக்கும் உடம்பை வலுப்படுத்தும் உதவுகிறது. உடம்பில் தேங்கியுள்ள அதிகப்படியான பித்தத்தை வெளியேற்றுகிறது.

கருங்காலி மரத்தின் வேரை நீரில் காய்ச்சி குடித்துவர இது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும்.

கருங்காலி மரப்பட்டையின் பொடியை நாவல் பட்டை பொடி, வெப்பம் பட்டை பொடி எடுத்து ஒன்றாக கலந்து அதை நாள்பட்ட மற்றும் ஆறாத புண்ணாகிய புண்ணானது விரைவில் ஆறும்.