குடலின் சீரான இயக்கத்திற்கு உதவும் மங்குஸ்தான் பழம் !!
மங்குஸ்தான் பழங்களைத் தினம்தோறும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறையாவது சாப்பிடுவது கண் பார்வை திறனை மேம்பட வைக்க உதவும்.
மங்குஸ்தான் பழத்தைத் தினம் ஒரு முறை மூன்று வாரங்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்க முடியும். தேவையற்ற உடற் கொழுப்பு பிரச்சனையைப் போக்க மங்குஸ்தான் பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது.
உடலில் அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை அனுப்பும் அற்புதமான பணியைச் செய்யும் இதயம் ஆரோக்கியமாக இருக்க மங்குஸ்தான் பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும். இதில் ஒமேகா 6 வேதிப் பொருட்கள் இதயத்தை வலுப்படுத்தும் சக்தியைக் கொண்டதாகும்.
மங்குஸ்தான் பழத்தைத் தினமும் சாப்பிட்டு வந்தால் காசநோய் என்ற பெரும் நோய் வேகமாகக் குணம் அடையும்.
மங்குஸ்தான் பழங்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும்.
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அதிக ரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவும். பருவ காலங்களில் மங்குஸ்தான் பழங்களை வாங்கி சாப்பிடுவது நல்லது.
குடலின் சீரான இயக்கத்திற்கும் குடல் சம்பந்தமான அனைத்து நோய்களையும் குணப்படுத்த மங்குஸ்தான் பழம் உதவுகிறது.