எளிதாக கிடைக்கும் முள்ளுக்கீரையில் உள்ள ஏராளமான நன்மைகள் !!
முள்ளுக் கீரையில் முட்கள் கூர்மையானதாகவும், பச்சை நிறம் உடையதாகவும் இருக்கும். இதனுடைய இலைகள் மிகவும் சிறியது ஆகும்.
நீர் அடைப்பு, பாம்புக்கடி, வயிற்றுவலி, வீக்கம், அழலை, மூத்திரக் காய் சம்பந்தமான நோய்கள், தேள் கடி, கட்டி முதலிய நோய்களைத் தீர்க்கும்.
வயிற்றுவலி குணமாக இதன் வேரோடு ஓமம், பூண்டு ஆகிய இரண்டினையும் சேர்த்து அரைத்துக் கொடுக்க குணமாகும்.
இந்தக் கீரையை உணவாக சமைத்து உண்ணலாம். துவரம் பருப்போடு இதனைத் சேர்த்துப் பொரியல் செய்தும், கடைசல் செய்தும் சாப்பிடலாம்.
முள்ளுக் கீரையை தானிய வகைகளுடன் நன்கு வேகவைத்து பால் கீரையில் உணவுச் சத்து, புரதம், இரும்பு சத்து, மணிச் சத்து, வைட்டமின் ஏ. பி, சி முதலியன மிகுதியாக உள்ளன.
இந்தக் கீரையை வேருடன் இடித்து சாறு எடுத்துத் தேள்கடி, பாம்புக்கடி போன்றவற்றிற்குக் கொடுத்தால் அவை தீர்ந்து நலம் உண்டாகும்.