செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அமுக்கரா கிழங்கின் அற்புத மருத்துவகுணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்...!!

தமிழில் இதனை ‘அமுக்கிரா’ என்று அழைக்கிறார்கள். அஸ்வகந்தாவிற்கு அசுவகந்தி, அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், ஆசிவகம், இருளிச்செவி, வராககர்ணி இப்படி பல்வேறு பெயர்களும் உண்டு.



இந்த மூலிகையை குறைந்த அளவில் நெடுநாட்களுக்கு சாப்பிட்டு வந்தால், நம் உடல் நலத்திலும், மன நலத்திலும் நல்ல விதமான முன்னேற்றத்தை அடையலாம்.
 
இந்த அமுக்கிரா கிழங்கிற்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி உள்ளது. நமக்கு ஏற்படும் பதற்றத்தினாலும், மன அழுத்தத்தினாலும் மனசோர்வு, உடல் சோர்வு ஏற்படும். அந்த சோர்வினை நீக்கி புத்துணர்ச்சியை அளிக்கிறது.
 
சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பு அதிகரிக்க, இந்த அமுக்கிரா கிழங்கு பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை  நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி சீராக வைக்கும் தன்மையும் இதற்கு  உண்டு.
 
மூட்டு வீக்கம், மூட்டுகளில் வலி இதில் பாதிக்கப்பட்டவர்கள் அஸ்வகந்தாவை பயன்படுத்தினால் மூட்டில் உள்ள வலி குறைகிறது.
 
நம் உடலில் சுரக்கும் T4 ஹார்மோனின் சுரப்பி குறைவாக உள்ளதால் தைராய்டு பிரச்சினை ஏற்படுகிறது. இந்த ஹார்மோனை அமுக்கிரா கிழங்கு மருந்து அதிகரிக்கிறது என்பதை ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தைராய்டுக்கான நிரந்தர தீர்வினை கண்டறிய ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டுதான்  இருக்கின்றது.
 
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை அமுக்கிராவின் மூலம் குணப்படுத்த முடியும். இளமையை பராமரிக்க அரை ஸ்பூன் அஸ்வகந்தா உடன்  நெல்லிக்காய் சாறு கலந்து தினமும் குடித்து வந்தால், உங்கள் சருமம் சுருக்கம் விழாமல் இளமையாக பராமரிக்கப்பட்டு நீண்டகாலம் அழகுடன் இருக்கலாம்.
 
நரம்புத் தளர்ச்சி கட்டுப்பட அமுக்கரா கிழங்கு 1 பங்கு, கற்கண்டு 3 பங்கு சேர்த்து, நன்கு தூளாக்கிக் கலந்து வைத்துக் கொண்டு காலை, மாலை வேளைகளில் 1  தேக்கரண்டி அளவு உட்கொண்டு, 1 டம்ளர் காய்ச்சிய பசும்பால் குடித்துவர வேண்டும்.
 
உடல் அசதி, மூட்டுவலி ஆகியவை தீர நன்றாகக் காய்ந்த அமுக்கரா கிழங்கை இடித்துத்தூள் செய்து கொள்ள வேண்டும். அத்துடன், சம அளவு சர்க்கரை சேர்த்து,  காற்றுப்புகாத பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். தினமும், காலை, மாலை வேளைகளில் ஒரு தேக்கரண்டி அளவு, 200 மி.லி. காய்ச்சிய பாலுடன் கலந்து கொடுக்க வேண்டும் 4 வாரங்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
 
காய்ந்த அமுக்கரா கிழங்கைச் சம அளவு சுக்குடன் சேர்த்து, வெந்நீர் விட்டு அரத்து மேல் பூச்சாகப் பூச வீக்கம் குறையும்.