ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2022 (13:33 IST)

அற்புத மருத்துவகுணம் கொண்ட கரிசலாங்கண்ணி மூலிகை !!

Karisalankanni
கரிசலாங்கண்ணி இரண்டு வகைப்படும் மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி எனப்படும். இது மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடியாகும். அதன் பூக்களின் வைத்துஅடையாளம் காணலாம்.


கரிசலாங்கண்ணி இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு பாலில் கலந்து வடிகட்டி சிறுவர்கள் மூண்டு நாட்களும் பெரியவர்களுக்கு ஏழு நாட்களும் காலை, மாலை குடிக்க வேண்டும். இதை குடிக்கும் காலத்தில் உப்பில்லாப் பத்தியம் இருக்க வேண்டும். நோய் நீங்கிய பின் ஆறு மாதம் வரை எளிதில் செரிக்கும் உணவு சாப்பிட வேண்டும்.

கரிசலாங்கண்ணி கீரையை வாரத்துக்கு இரண்டு நாள் சமையல் செய்து அல்லது சாற்றை எடுத்த 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதை நாம் பயன் பயன்படுத்தினால் பல நன்மைகளை அடையலாம்.

இரத்த சோகை உள்ளவர்கள் கரிசலாங்கண்ணி கீரை சாற்றை எடுத்த தினமும் 100 மில்லியளவு கூடித்து வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். கல்லீரல் செயல்பாடு அதிகரிக்கும்.

அடிக்கடி சளி ஏற்படும் குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு எடுத்து இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் நீண்ட காலமாக உள்ள சளித்தொல்லை தீர்ந்து ஆரோக்கியமாக இருக்கும்.

மஞ்சள் காமாலை மற்றும் பல கொடிய நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள கரிசலாங் கண்ணிக் கீரை உதவுகிறது.