புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பல்வேறு காய்ச்சலுக்கு தீர்வு தரும் ஒரே மூலிகை கண்டங்கத்திரி !!

கண்டங்கத்திரி செடி வகையை சேர்ந்தது. கண்டங்கத்திரி செடி முழுவதும் கூர்மையான முட்கள் கொண்டது. முட்கள், மஞ்சளாக, பளபளப்பாக, 15 செ.மீ. நீளத்தில்  காணப்படும்.

கண்டங்கத்தரி பழங்கள் மற்றும் தண்டுகள் நுண்ணுயிர்களை எதிர்க்கும் மருத்துவ பண்புடையது. கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி தலைவலி, வாத நோய்களுக்கு பூசி வர குணமாகும்.
 
பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகைகள் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்டவை. எனவே, கண்டங்கத்திரி, தூதுவளை,  ஆடாதோடை ஆகிய மூலிகைச் செடிகளின் இலைகளை சம அளவு எடுத்து காயவைத்துப் பொடியாக்கவும்.
 
இந்த பொடியை தினமும் இரு வேளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும்  தீரும்.
 
வறட்டு இருமலுக்கு கண்டங்கத்திரி வேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், சீரகம் 5 கிராம், கொத்தமல்லி 1 பிடி ஆகியவற்றை 2 லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து அரை லிட்டராக காய்ச்சி 4 முதல் 6 முறை 100 மில்லி வீதம் குடிக்க சீதளக் காய்ச்சல், சளிக் காய்ச்சல், நுரையீரல் காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து காய்ச்சல்களும்  நீங்கும்.
 
கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி, நெருப்பில் சுட்டு, பொடியாக்கி, ஆடாதோடை இலைகளில் வைத்துச் சுருட்டு போலச் செய்து புகை பிடிக்க பல்வலி, பல் கூச்சம் தீரும். பழத்தை உணவாக எடுத்துக் கொண்டால் ரத்த அழுத்தம் சீராகும்.
 
கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து உடலில் தேய்த்து வர வேர்வை  நாற்றம் அகலும்.