1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இளநீரில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

இயற்கை கொடுத்த மிகப் பெரும் வரப் பிரசாதம் இளநீர் ஆகும். இளநீர் உடலில் உள்ள இரத்தத்தைத் சுத்தப்படுத்துவதாக உள்ளது, மேலும் இது இரத்தச் சோகைப்  பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது. 

இரத்தக் கொதிப்பு பிரச்சினை உள்ளவர்கள் நிச்சயம் தினமும் இளநீரை எடுத்துக் கொண்டால் நிச்சயம் இரத்தத்தில் உள்ள கொழுப்புப் பிரச்சினையானது சரியாகும்.
 
உடல் சூடு, அம்மை நோய், உடலில் கொப்புளங்கள் ஏற்படுதல் போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக இளநீர் இருக்கின்றது, அதேபோல் கர்ப்பிணிப் பெண்கள் கரு வளர்ச்சிக்கு உதவுக் வகையில் தினமும் இளநீரைக் குடித்து வருதல் வேண்டும்.
 
சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுதல், சிறுநீரக கல்லடைப்பு போன்ற பிரச்சினைகளைச் சரி செய்வதோடு, சிறுநீரகத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவுவதாகவும் உள்ளது.
 
இளநீர் மூளைக்கு புத்துணர்ச்சியினைக் கொடுப்பதாகவும்,  இது நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைச் சரி செய்வதாகவும் உள்ளது. மேலும் கல்லீரல் சார்ந்த  பிரச்சினைகளுக்கும் இளநீர் சிறந்த தீர்வாக இருக்கின்றது.
 
இதயநோய், வயிற்று வலி, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற பிரச்சினை உள்ளவர்கள் நிச்சயம் இளநீரைக் குடித்து வருதல் வேண்டும்.  மேலும் இது  எலும்புகளின் வளர்ச்சிக்கும் உதவுவதாகவும் உள்ளது.