செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 28 மே 2022 (10:37 IST)

சீரக தண்ணீர் குடித்து வருவதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க முடியுமா...?

Cumin
சீரக தண்ணீரில், உமிழ்நீர் சுரப்பிகளைத் தூண்டி நன்றாக சுரக்க செய்து உணவை திறம்பட சீரணிக்க உதவும் அத்தியாவசிய எண்ணெய்கள் இருப்பதாக அறியப்படுகிறது. இது வாயு சம்பந்தமான வயிற்று வலிக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.


சீரக நீரில் உள்ள தைமோகுவினோன் என்ற சக்திவாய்ந்த பொருள் கல்லீரலை வீக்கத்திலிருந்து பாதுகாக்கிறது மற்றும் கல்லீரல் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

சீரகத் தண்ணீர் குடித்து வருவதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்களை முற்றிலுமாக வெளியேற்றி சிறுநீரகங்களில் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

தினமும் காலையில் டீ காபி குடிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் அதற்கு பதிலாக சீரகத் தண்ணீரைக் குடித்து வந்தால், மூளை புத்துணர்ச்சி அடைந்து நன்கு சுறுசுறுப்புடன் செயல்படும்.

ஆழ்ந்த தூக்கத்திற்கு ஒரு காரணமான மெலடோனின் என்னும் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்ய ஊக்கு விக்கிறது. இதன் மூலம் ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் வர சீரக தண்ணீர் உதவுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு ஆழ்ந்த தூக்கம் அவசியமாகும்.

திடீரென தவறான உணவுகளின் காரணமாக இரத்தச் சர்க்கரை அளவு உயரும் போது இன்சுலின் உற்பத்தி செய்யும் கணையத்தை சோர்வடையச் செய்கிறது. சீரக தண்ணீர் உடலை இன்சுலினுக்கு அதிக உணர்திறன் தருகிறது மேலும் நீண்ட நேரத்திற்கு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.

சீரகம் ஒரு சிறந்த நீரேற்றியாகும். உடலின் அனைத்து செல்களையும் நீரேற்றமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஜீரா தண்ணீரில் சிறிது தேன், எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.