வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 9 மே 2022 (17:47 IST)

இந்த பொருட்களை சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியுமா...?

காய்கறியில் மிகவும் ருசியான ஒரு காய் வெண்டைக்காய். இந்தக் காயில் மிகவும் குறைந்த அளவு கலோரிகள் உள்ளன. ஆக இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும்.


சிட்ரஸ் ரக பழங்களைப் போலவே இந்தப் பெர்ரி வகை பழங்களும் கெட்ட கொழுப்பை நீக்க மிகவும் உதவுகிறது.

செர்ரி பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவும். செர்ரி பழங்களைச் சாலட், பிரட் போன்ற உணவுகளில் சேர்த்துச் சாப்பிடலாம்.

பூசணிக்காயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. அதே வேளையில் குறைந்த அளவு கலோரிகள் காணப்படுகின்றன. இது கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து விடும்.

சியா விதைகளில் நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது உகந்தது. இதனால் கெட்ட கொழுப்பு கரையும்.

வாழைப்பழங்கள் பொதுவாக நார்ச்சத்து நிறைந்த உணவு என்பது அனைவரும் அறிந்ததே! அந்த வகையில் இந்தப் பழங்கள் கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.

பாதாம் பருப்புகளை தினமும் சாப்பிடுவது நல்லது. இதயம் வலிமை அடைந்து, கெட்ட கொழுப்புகள் நீங்கிவிடும்.

இஞ்சி பல்வேறு விதமான மருத்துவக் குணங்களைக் கொண்டது. இந்த இஞ்சி இயற்கையாகவே பல நோய்களைக் குணப்படுத்தும் ஒரு சிறந்த மருந்துப் பொருளாகும். இஞ்சி கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்துகின்றது.

இஞ்சி டீ அடிக்கடி குடிப்பது உகந்தது. உலர்ந்த இஞ்சியைச் சுக்கு என்று அழைப்பார்கள். இந்த சுக்கு கலந்த கருப்பட்டிகள் கிடைக்கின்றன. இவற்றைச் சாப்பிடுவதன் மூலமும் நல்ல பலனை அடையலாம்.