1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வியாழன், 13 அக்டோபர் 2022 (16:31 IST)

ஆரோக்கியத்துக்கு மிகவும் ஏற்றதா கருப்பு உப்பு...?

Black salt
கருப்பு உப்பில், கடல் உப்பைவிட சோடியம் குறைவாகக் காணப்படுகிறது. வட இந்தியாவில் காலா நமக் என்று பெயர் கொண்ட கருப்பு உப்பையே மக்கள் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். இவை பெரும்பாலும் இமய மலைப் பகுதிகளிலிருந்தும், நேபாளப் பகுதியிலிருந்தும் எடுக்கப்படுகிறது. இதில் சோடியம் குளோரைடு உள்ளது.


மலசிக்கல் உள்ளவர்கள் சிறிதளவு  கருப்பு உப்பை  நீரில் கரைத்து  அதனுடன் இஞ்சி எலுமிச்சை சாறு சேர்த்து அருந்திவர மலம் வெளியேறி மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். கருப்பு உப்பில் முட்டையின் மணம் இருப்பதால், சைவ விரும்பிகள் இந்த உப்பை விரும்புவதில்லை. மணம் மட்டுமல்ல, முட்டையின் குணங்கள் அனைத்தும் இந்த உப்பிற்கு உண்டு. ஆரோக்கியத்துக்கு மிகவும் ஏற்றதாகும்.

மூட்டு வலி உள்ளவர்கள்  கைப்பிடி அளவு உப்பை எடுத்துக்கொண்டு  ஒரு வாணலியில் போட்டு வறுக்கவும் பின் அதை எடுத்து ஒரு துணியில் கட்டி வலியுள்ள இடங்களில்  ஒத்தடம் கொடுத்து மசாஜ் செய்தால் மூட்டுவலி இருந்த இடம் காணாமல் போகும்.

தினமும் தக்காளி சாறில், கருப்பு உப்பு கலந்து குடித்து வந்தால், பொடுகுத் தொல்லையிலிருந்து விடுதலை பெறலாம். குளிக்கும் நீரில் கருப்பு உப்பைக் கலந்து குளித்தால், சருமத்தில் வெடிப்புகள் விழாமல், வழவழப்பாக இருக்கும்.

கால் பாதங்கள் வீங்கி, வெடிப்புக்கள் இருந்தால், சிறிது கருப்பு உப்பை, வெந்நீரில் கலந்து, பாத்திரத்தில் நிரப்பி, பாதத்தினை நீருக்குள் மூழ்கினாற்போல் வைத்திருந்தால், வீக்கமும் குறையும். வெடிப்புக்களும் மறையும்.

Edited by Sasikala