திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பயன்தரும் கற்றாழையில் செய்யப்படும் சில வைத்திய முறைகள்....!!

கற்றாழைச் சோற்றுடன் இஞ்சியும், சீரகமும் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு அன்றாடம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பித்தத்தால் ஏற்படும் தலைச்ச்ய்ர்றல் குமட்டல், வாந்தி ஆகியன குணமாகும்.
கற்றாழைச் சோற்றை மோரில் கலந்து அன்றாடம் குடித்துவர உடல் சூட்டினால் ஏற்படும் முகப்பருக்கள், கட்டிகள், வெயிலில் அலைவதால் ஏற்படும் தோலின் கருமை மற்றும் மேல் தோலில் ஏற்படும் கருந்திட்டுக்கள் குணமாகும்.
 
சோற்றுக் கற்றாழையின் சாற்றையோ அல்லது உள்ளிருக்கும் கூழ்ப் பகுதியையோ தினமும் அளவோடு சாப்பிடுவதால் கண் பார்வை தெளிவு  பெறும்.
 
சோற்றுக் கற்றாழையை சாப்பிடுவதாலும், மேல் பூச்சாக பயன்படுத்துவதாலும், பெண்கள் மற்றும் ஆண்களின் சிறுநீர்த் தாரையில் உள்ள  எரிச்சல், புண் குணமாகும்.
 
சோற்றுக் கற்றாழையின் இளமடலை தோல் சீவி சோற்றை சுத்திகரித்து அதனுடன் சீரகம், கற்கண்டு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட குருதியும் சீதமும் கலந்த வயிற்றுப்போக்கு குணமாகும்.
 
100 கிராம் கற்றாழைச் சோற்றை எடுத்துக்கொண்டு அத்தோடு 10 கிராம் ஊறவைத்த வெந்தயத்தையும், சிறிதாக அரிந்த ஒரு வெள்ளை வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து 350 கிராம் விளக்கெண்ணெயில் இட்டு பதமாகக் காய்ச்சி, வடித்து பத்திரப்படுத்திக் கொண்டு காலை,  மாலை என இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் தணிந்து உடல் பெருகும், அழகான தோற்றம் ஏற்படும்.