Daily Horoscope
✕

கண்பார்வைத் திறனை மேம்படுத்தும் கொய்யாப்பழம்...!

Updated: திங்கள், 12 நவம்பர் 2018 (11:54 IST)
 
ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற மற்றா பழங்களுடன் கொய்யாப் பழத்தை ஒப்பிடும் போது கொய்யாவில் அதுவும் முழுக் கொய்யாப் பழத்தில் குறைந்த அளவு சர்க்கரையே உள்ளது.
 
கொய்யாப்பழத்தில் விட்டமின் டி மற்றும் சி, கால்சியம் உயிர்சத்துக்கள் அடங்கியுள்ளன. வைட்டமின் ‘சி’ நோய் எதிர்ப்புத் திறனை அதிரிப்பதுடன் சாதாரணமான நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகளின் தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.
 
கொய்யாப் பழம் சாப்பிடுவதனால் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் இவற்றில் லைக்கோபீனே நிறைந்துள்ளதால் மார்பகப் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறது.
 
கொய்யாப் பழத்தில் நார்ச்சத்தினை உள்ளடக்கி உள்ளதால் சர்க்கரையின் அளவு நன்கு ஒழுங்கு படுத்தப்படுகிறது. எனவே நீரிழிவு நோயினால் பதிக்கப் பட்டவர்களுக்குக் கொய்யாப் பழம் சிறந்த உணவாக இருக்கும்.
 
கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் அது கர்ப்பிணிகளுக்கும், வயிற்றில் வளரும் கருவுக்கும் கண் குறைப்பாட்டை போக்க உதவுகிறது. குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்க்க உதவுகிறது. மேலும் நரம்பியல் கோளாறுகளிலிருந்து புதிதாகப் பிறக்கும் குழந்தையைப் பாதுகாக்கிறது.
 
கொய்யா பழத்தில் போலிக் அமிலமும், வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது. இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை  சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது.

எல்லாம் காட்டு

ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை - விஞ்ஞானிகள் தீவிரம்...

எந்த நோய்க்கு எந்த தண்ணீர் சிறந்தது? - வாங்க பார்ப்போம்..

தினமும் ஒரு பப்பாளி!.. உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!..

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments