வியாழன், 14 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (09:52 IST)

செம்பருத்தி பூவை எவ்வாறு பயன்படுத்துவதால் பலன்களை பெறமுடியும்...?

Hibiscus flower
இதயநோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான டானிக் செம்பருத்தி பூவைப் பச்சையாகவோ, காயவைத்து பொடி செய்தோ வைத்துக்கொண்டு, பாலில் கலந்து காலை மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும்.


செம்பருத்தி பூவின் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி வடிகட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்தவேண்டும். இந்த எண்ணெய்யை தினமும் தலையில் தடவி வர தலைமுடி கறுத்து அடர்த்தியாக வளரும்.

செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊறவைத்துக் குளித்துவர தலைப் பேன்கள் குறையும்.

ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாக சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக இதனைப் பயன்படுத்தலாம். அதனால் உடல் உஷ்ணம் குறைந்து விடும். சாதாரண சுரங்களும் இந்நீரைக் குடித்தால் குணமாகும்.

செம்பருத்தி பூவை நெய்யில் வதக்கி காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மேலும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.

செம்பருத்தி பூவின் இதழ்களை மென்று சாப்பிட உடல் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.

செம்பருத்திப்பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டி கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று, நான்கு நாட்கள் செய்தால் தலையில் உள்ள பேன்கள் ஒழிந்துவிடும்.