வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரும் முட்டைகோஸ் எப்படி தெரியுமா...?

பல அற்புத சத்துக்கள் கொண்டதுதான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் முட்டைகோஸ். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கும் முட்டைக்கோஸ், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

முட்டைகோஸை வேகவைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிடாமல் அரைவேக்காடாகவோ அல்லது பச்சையாகவோ சாப்பிடுவது உடலுக்கு நல்லது. பச்சையாக சாப்பிடும் போது அதனுடைய சத்து அனைத்தும் நமக்கு கிடைத்து விடும்.
 
முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியன்ஸ் மற்றும் வைட்டமின்களான ஏ, சி, கே போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் இவை உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் மற்றும் ஆண்மை குறைபாடு போன்றவற்றை தடுக்கும்.
 
முட்டைகோஸ் வேகவைத்த நீர் அல்லது முட்டைகோஸ் சூப் ஆகியவற்றை தினமும் குடிப்பதால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்திடும். தொடர்ந்து உடல் சோர்வடையாமல் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க உதவிடும்.
 
முட்டைக்கோஸில் புற்று நோயை எதிர்த்து போராடும் சத்துகள் உள்ளன. எனவே இதனை சாப்பிட்டால் புற்று நோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும்  தடுக்கலாம்.மேலும் ஆய்வு ஒன்றிலும் முட்டை கோஸ் சாப்பிட்டால் புற்று நோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியபட்டுள்ளது.
 
சிவப்பு முட்டைக்கோஸில் உள்ள பெடாலெயின்ஸ், உடல் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. முட்டைக்கோஸ், பிரக்கோலை, கீரை போன்ற காய்கறி வகைகள் டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.