1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கொத்தமல்லி சாற்றின் ஆரோக்கிய நன்மைகள் !!

கொத்தமல்லி தழையில் விட்டமின் ஏ, பி, சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்பு சத்தும், இரும்புச்சத்தும் உள்ளன. மனித்தனின் உடலை வலுவாக்கும் அனைத்து சத்துக்களும் இதில் உள்ளது. இது வாயு பிரச்சினையை குணமாக்கும்.

நாட்டு கொத்துமல்லி இலை - கால் கட்டு, தேங்காய் - 1, நாட்டு சர்க்கரை - தேவையான அளவு. சுத்தம் செய்த கொத்துமல்லி இலையுடன் தேங்காய் சேர்த்து  அரைத்து வடிகட்டவும். இதன் கூட தேவையான அளவு தண்ணீர், நாட்டு சர்க்கரை கலந்து பருகலாம். 
 
இதைத் தொடர்ந்து பருகுவதால் காமாலை, கேன்சர் போன்ற மிகக் கொடிய நோய்கள் அனைத்தும் குணமாகும். உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும்  வெளியேற்றும். வயிறு சம்பந்தபட்ட அனைத்து பிரச்சினைகளையும் குணமாக்கும்.

கல்லீரலை பலப்படுத்தும். பித்தம் கட்டுக்குள் இருக்கும். இதை தயார் செய்வது மிகவும் எளிதானது. இதை அனைவரும் பருகலாம்.
 
தினமும் தண்ணீர்க்கு, டீ, காபிக்கு பதில் இதை அருந்தலாம். கொத்தமல்லிக்கு பதில் கருவேப்பிலையும் , புதினாவையும் இதே போன்று சாறு தயார் செய்து   உபயோக்கிலாம் ஆனால் கொத்தமல்லி சாறு தான் சிறந்தது.
 
வெறும் கொத்துமல்லி இலைச்சாறுடன் எலுமிச்சை சாறு, உப்பும், மிளகு தூளும் சேர்த்து அருந்தலாம்.
 
கொத்துமல்லி இலைச்சாறுடன், பசும்மோர், உப்பும் கலந்தும் அருந்தலாம்.
 
கொத்துமல்லி இலைச்சாறு அருந்தும் நாள் அன்று பசிக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும்.
 
குறிப்பு: இந்த சாற்றினை கண்டிப்பாக அடுப்பில் வைக்க கூடாது.