செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மூலிகை மருத்துவம்....!!

கல்லீரல் பாதிக்கப்பட்டாலோ, பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ கழிவு பொருளான பிலிரூபின் உடலிலேயே தங்கிவிடுகிறது. இதன் காரனாமாக உடலில் மஞ்சள் நிறம் ஏற்படுகிறது.
ஒருவருக்கு மஞ்சள் காமாலை நோய் உள்ளது என்றால் அவர்களுக்கு வாந்தி, குமட்டல், பசியின்மை, உடல் சோர்வு, வயிற்றின் வலதுபக்க மேல்பாகத்தில் வலி, மூட்டுவலி, வயிறுவீக்கம், காய்ச்சல், ரத்தக்கசிவு என ஒன்பது விதமான அறிகுறிகள் காணப்படும்.
 
கண்ணின் வெள்ளைப்படலத்திலும், நாக்கின் அடிப்பகுதியிலும் மஞ்சளாக இருக்கும். உடலும் மெலிந்து காணப்படும்.
 
மஞ்சள் காமாலை என்பது அடைப்புக் காமாலை என்றும், அடைப்பில்லா காமாலை என்றும் இருவகைப்படும். அடைப்புக் காமாலையில் கணைய கோளாறு, பித்தக்குழாய் கற்கள், பித்தக்குழாய் புற்றுநோய் என்ற மூன்று உட்பிரிவும், அடைப்பில்லா காமாலையில் வைரஸ் கிருமிகள், அ‌திகமாக அரு‌ந்து‌ம் மதுபானம், ‌டைபாய்டு போ‌‌ன்ற கா‌ய்‌ச்சலை ஏ‌ற்படு‌த்து‌ம் பா‌க்டீ‌ரியா‌க்க‌ள், மலேரியா என்ற ஒட்டுண்ணிகள், ‌சில மா‌த்‌திரைக‌‌ள் போ‌ன்றவ‌ற்றாலு‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு ம‌ஞ்ச‌ள் காமாலை ஏ‌ற்படலா‌ம்.
 
மூலிகை மருத்துவம்:
 
கீழாநெல்லி, சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள் இவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, சர்க்கரை கலந்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தி வந்தால் மெல்ல மெல்ல முழுமையாக குணமடையலாம்.
 
கீழாநெல்லி, சீரகம், பூவரச பழுத்த இலை, கரிசலாங்கண்ணி இவை அனைத்தும் 3 கிராம் அளவிற்கு எடுத்துக் கசாயம் செய்து காலை, மாலை வேளைகளில் சாப்பிடும் முன் அருந்தினால் காமாலை நோய் குணமாகும்.