வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

தலையில் ஏற்படும் பொடுகு மற்றும் வறண்ட சருமத்தை போக்கும் கற்றாழை ஜெல்...!!

இயற்கையாக கிடைக்கும் காற்றாழை ஜெல்லை கொண்டு கூந்தலுக்கு மாஸ்க் போட்டு வந்தால் முடி பளபளக்கும், பட்டுப்போன்ற மென்மையான கூந்தலையும் பெறலாம்.
தொடர்ந்து கர்றாழை ஜெல்லைகூந்தலுக்கு பயன்படுத்தி வந்தால் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. இதனால் கூந்தல்  பாதுகாக்கப்படுகின்றன.
 
கூந்தலுக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்கள் கற்றாழையில் இருந்து கிடைப்பதோடு, நீளாமான கூந்தலை பெறலாம்.
 
கற்றாழை ஜெல் முடி உதிர்வை தடுத்து கூந்தலை வலுவுடையதாக்குகின்றது. பொடுகு, மாசு உள்ளிட்டவற்றில் இருந்து கூந்தல் பாதுகாக்கப்படுவதால் முடி உதிர்வு என்ற விஷயத்திற்கே இடமின்றி போகின்றது. 
 
கற்றாழையானது கூந்தலுக்கு இயற்கை கண்டிஷனராக பயன்படுகின்றது. ரசாயனம் கலந்த செயற்கை ஷாம்புக்களை தவிர்த்து இயற்கையான முறைக்கு மாறினால் கூந்தலுக்கு மட்டுமின்றி உடலும் நலம் பெறும்.
 
கற்றாழையில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருள் தலையில் ஏற்படும் பொடுகு மற்றும் வறண்ட சருமத்தை போக்கி ஆரோக்கியமான சருமத்தை  கொடுக்கிறது.
 
கற்றாழை பேக் செய்வதற்கு: தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல், பயன்படுத்தும் முறை: இதை இரண்டையும் நன்றாக கலந்து மெதுவாக தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் மசாஜ் செய்து வர வேண்டும். பிறகு நீரில் அலசிக் கொள்ளுங்கள். இதை வாரத்திற்கு இரண்டு முறை  என செய்து வந்தால் நல்ல பட்டு போன்ற கூந்தலை பெறலாம்.