Daily Horoscope
✕

பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் மருதம் பட்டை !!

Written By Sasikala
Updated: வெள்ளி, 26 மார்ச் 2021 (11:25 IST)

வாய் புண், தொண்டை வலி போன்றவற்றால் பாதிக்கப்படுவோர் ஒரு ஸ்பூன் மருதம் பட்டை பொடியை கலந்து தண்ணீரில் 10 நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு, அந்த  நீரை வெதுவெதுப்பான சூட்டில் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி, வாய்ப்புண் குணமாகும்.
 
நன்கு உலர்ந்த மருதம்பட்டையை நன்கு பொடித்து அதை 5 கிராம் அளவு எடுத்து அதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல், ஆஸ்துமா  பிரச்சனைகள் குணமாகும்.
 
இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதே மாரடைப்புக்கு காரணம். இரத்தக் குழாயில் கொழுப்பு சேராமல், அடைப்பு ஏற்படாமல் தடுக்கும் சக்தி மருதம்பட்டைப் பொடிக்கு உள்ளது.
 
இதயத்தை வலுவுடன் வைக்கும் ஆற்றல் வெண்தாமரைப் பூவின் பொடியில் உள்ளது. இரண்டு கிராம் அளவிற்கு இரண்டு பொடியையும் எடுத்து வெந்நீர் அல்லது  பாலில் கலந்து காலை, இரவு உணவுக்குப் பின் அருந்தினால் இரத்தக் குழாய் அடைப்பு வராமால் தடுக்கலாம்.
 
மருதம் பட்டை, வில்வம், துளசி சம அளவில் எடுத்து சூரணம் செய்து, காலை மற்றும் மாலை நேரத்தில் சாப்பிட்டு வர இந்த பிரச்னைகள் விலகும்.
 
இதயம் சார்ந்த நோய்களுக்கு c, வெண் தாமரைப் பூ 100 கிராம், ஏலக்காய், இலவங்கம் மற்றும் திரிகடுகம் 10 கிராம் அளவில் கலந்து பொடியாக்கி காலை மற்றும் மாலை வேளைகளில் 5 கிராம் அளவு பொடியை கொதிக்க வைத்து கஷாயமாக அருந்தி வர, இதய நோய் விரைவில் குணமடையும்.
 
சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருதம் பட்டை, ஆவாரம் பட்டை சம அளவு எடுத்து அதில் 2 ஏலக்காய், சுக்கு சேர்த்து காலை மற்றும் மாலை வேளைகளில் காய்ச்சி  காபி, டீ-க்கு பதில் குடித்து வர சர்க்கரை நோய் தீரும்.

எல்லாம் காட்டு

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments