வியாழன், 14 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நுரையீரல் தொற்றை தடுத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் உணவுகள்...!!

நுரையீரலை பலப்படுத்திக் கொள்வதன் மூலம் தொற்றை எதிர்த்துப் போராடமுடியும். நுரையீரலை பலப்படுத்த அதிலும் உடனடியாக பலப்படுத்த, செய்ய வேண்டிய  விஷயங்களில் உணவு வகைகளும் அடங்கும்.

இஞ்சி: தினமும் டீ குடிக்கும் போது இஞ்சியை தட்டி சேர்த்து இஞ்சி டீயாகவோ, அல்லது சுக்கு காபியாகவோ குடித்து வருவது மிகவும் நல்லது. இஞ்சி நுரையீரலில் இருக்கும் கழிவுகளை அகற்றும் சிறப்பு குணங்களை கொண்டிருக்கும் பொருள். நுரையீரல் பலவீனத்தையும் அதன் வீக்கத்தையும் குறைக்க வல்லது. 
 
நுரையீரலையும், சுவாசப்பாதையையும் சீராக்கும் இஞ்சியை சிறிதளவேனும் உடலுக்கு எடுத்துகொள்வது நன்மை தரும். குறிப்பாக இந்த வைரஸ் தொற்று பரவும் நேரத்தில் உங்களை பாதுகாக்கும் கவசமாகவே இஞ்சியை சொல்லலாம்.
 
ஆடாதோடை: ஆடாதோடை நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றி நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள உதவும். அவ்வபோது சளி வந்தால் ஆடாதோடை இலையை உலரவைத்து பொடித்து வைத்துகொள்ள வேண்டும். அரைடீஸ்பூன் தேனில் கால் டீஸ்பூன் அளவு ஆடாதோடை பொடியை குழைத்து  நாக்கில் தடவ வேண்டும். இதனால் நுரையீரல் ஆரோக்கியமாக பலமாக இருக்கும்.
 
பாலை நன்றாக காய்ச்சி மிளகை நுணுக்கி அதில் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து குடித்துவந்தால் நுரையீரலுக்கு வலு கிடைக்கும். மஞ்சள் ஆன் டி ஆக்ஸிடெண்ட்  தன்மை நிறைந்திருக்கிறது. இதில் இருக்கும் குர்குமின் என்னும் பொருள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வேகமாக அதிகரிக்ககூடியவை.
 
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் ஒரு கப் பாலில் இரண்டு சிட்டிகை மிளகுத்தூள், ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்த பால் குடித்துவருவது  நிச்சயம் பாதுகாப்பாக இருக்கும். மசாலா பால் என்பதால் குழந்தைகளும் குடித்துவிடுவார்கள். அதிக இனிப்புக்கு கூடுதலாக நாட்டுசர்க்கரை சேர்த்து கொடுக்கலாம்.
 
பூண்டு: பூண்டு இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு பொருள். பூண்டை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் நுரையீரல் புற்று நோய்  வருவதை தடுக்க முடியும். பூண்டில் இருக்கும் அலிசின் என்னும் ஆன்டி பயாடிக் சத்து நுரையீரல் தொற்றை உண்டாக்கும் வைரஸ், பாக்டீரியாக்களை அழிக்கும்  வல்லமை கொண்டது.
 
துளசி: துளசி எப்போதுமே சளி இருமலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருள். காலையில் வெறும் வயிற்றில் துளசியை நன்றாக மென்று சாறை விழுங்கினால் அதன் சாறு இறங்க இறங்க சுவாசக் குழாயிலும் அதிசயத்தக்க மாற்றங்கள் நிகழும். சுவாசப்பிரச்சனை இருப்பவர்கள் ஒரு மண்டலத்துக்கு துளசியை மென்று சாப்பிட்டு வந்தால் சுவாசப்பிரச்சனை சீராகும்.