1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வயிறு சார்ந்த கோளாறுகளை குணமாக்கும் வெந்தயக்கீரை !!

உடல் சோர்வாக உள்ளவர்கள் வெந்தயக்கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம். வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை அதிகரிக்கும்.

நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு வெந்தயக் கீரை ஓர் சிறந்த மருந்தாகும். இது நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர சீரிய முறையில் உதவும். வயிற்று வலி உப்புசமாக உணர்தல் வயிற்று எரிச்சல் போன்ற வயிறு சார்ந்த கோளாறுகள் குணமாக வெந்தயக் கீரை உதவும்.
 
இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது  நல்லது.
 
வெந்தயக்கீரையினை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை ஆறும்.
 
வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது.  பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர, காசநோயும் குணமாகும் என்று கூறப்படுகிறது. உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும். குடல் புண்கள் நீங்கும்.
 
வெந்தயக் கீரையை வேகவைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாவதோடு, உடல் முழுவதுமே சுத்தமாகும். வெந்தயக்கீரையை வெண்ணெய்யிட்டு வதக்கி உண்டால் பித்தக் கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும்.
 
உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இதன் குளிர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைந்து குளிர்ச்சியாக உணர உதவும்.வெந்தயக் கீரையை உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொள்வதால் மார்புவலி, தலை சுற்றல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுக் காணலாம் என்று கூறப்படுகிறது.