செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பல மருத்துவ தேவைகளுக்காக பயன்படும் பெருஞ்சீரகம் !!

பெருஞ்சீரகம் ஒரு மூலிகைப் பொருள். இது குறிப்பாக குழந்தைகளுக்கு, அதிலும் கைகுழந்தைகளுக்கு ஏதாவது உடலில் உபாதைகள் ஏற்பட்டால் சிகிச்சைத் தர  பயன்படுத்தப் படுகிறது. மேலும் பெரியவர்களும் இதனை பல மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்தி வருகிறார்கள்.

சுவாச பிரச்சனை மற்றும் சுவாசக் குழாயில் ஏற்படும் தொற்றுநோய் போன்றவற்றைக் குணப்படுத்த இது பயன்படுத்தப்படுகிறது. இருமல் மற்றும் தொண்டையில் வலி மற்றும் வேறு பிரச்சனைகள் இருந்தால் அதை குணப்படுத்த இது பயன் படுத்தப்படுகிறது.
 
தாய்பால் கொடுக்கும் பெண்கள் பெருஞ்சீரகத்தை உணவில் சேர்த்து பயன்படுத்தி வந்தால், சீராக தாய்பால் சுரக்கும். இதனால் குழந்தைக்கும் தேவையானத் தாய்பால் கிடைக்கும். பெருஞ்சீரகம் தாய்பால் அதிக அளவில் சுரக்க உதவுகிறது. 
 
குழந்தை பெற்ற தாய்மார்கள், குழந்தைக்கு நல்ல தாய்பால் சுரந்து பால் கொடுக்க இந்த பெருஞ்சீரகம் பயன் படுத்தப்படுகிறது. கருவுற்றிருக்கும் தாய்க்கு குழந்தை எளிதாக பிரசவிக்க இந்த பெருஞ்சீரகம் லேகியமாக வேறு பொருட்களோடுகலந்து தரப்படுகிறது. மேலும் இது சாராகவும் தரப்படுகிறது.
 
ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படாமல் இருக்கவும் மற்றும் அது குறித்த பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகிறது. ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதில்  நிறைந்துள்ளது.
 
பெருஞ்சீரகம் ஒரு நல்ல வலி நிவாரணியாக பயன் படுத்தப்படுகிறது. உடலில் ஒவ்வாமை ஏதாவது ஏற்படிருந்தால் அதனை குணப்படுத்த இது  பயன்படுத்தப்படுகிறது. பெருஞ்சீரகம் ஒரு நல்ல மனமூட்டியாகவும் பயன் படுத்தப்படுகிறது.
 
பெருஞ்சீரகத்தில் அதிக அளவு வைட்டமின் A சத்து நிறைந்துள்ளதால் உங்கள் கண்களுக்குத் தேவையான சத்துக்களை தருகிறது. இதனால் கண்களில் பசும்படலம் ஏற்படாமல் தடுக்கவோ அல்லது ஏற்பட்டிருந்தால் அதன் தாக்கத்தை குறைக்கவோ, குணப்படுத்தவோ உதவுகிறது.