செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தினமும் சூரிய ஒளியில் நிற்பதால் இத்தனை பயன்கள் உண்டா...?

தினமும் காலை குறைந்தபட்சம் 5 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பதால் முகப்பரு, அரிக்கும் தோலழற்சி, மஞ்சள் காமாலை, தடிப்புத் தோல் அழற்சி மற்றும் பூஞ்சை தோல் தொற்று நோய்கள் முதலிய எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க உதவும்.

தினமும் காலையில் சிறிது நேரம் சூரிய ஒளியில் நின்றாலே தோல் நோய்கள் பிரச்சினையை நாம் தவிர்க்கலாம். ஆனால் நீண்ட நேரம் சூரிய வெப்பத்தில் நின்றால் தோல் கருத்துவிடும்.
 
குழந்தைகளை தினமும் காலை 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் வைத்திருந்தால் போதும், அது அவர்களுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும். எந்த வகைப் புற்றுநோய் வருவதையும் தவிர்க்க சூரிய ஒளி நம் தோலில் படுமாறு இருந்தால் போதும்.
 
இன்சுலின் உற்பத்தியில் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது, வைட்டமின் டி குறைபாடு இருப்பதால், இன்சுலின் எதிர்ப்பால் அவதியுற நேரும், அது டைப் 2  நீரிழிவு நோயை உண்டாக்கும். நம் தோல் அதிக வைட்டமின் டி-ஐ உற்பத்தி செய்ய, நாம் தினமும் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பது நல்லது.
 
சூரிய ஒளியில் நிற்பதால் அது தோலில் பட்டு தோல், வைட்டமின் டி-ஐ உற்பத்தி செய்யும், அதன் மூலம் பார்வை வலுப்பெறும். வைட்டமின் டி-க்கான மிகப் பெரிய  ஆதாரமாக சூரிய ஒளி கருதப்படுகிறது. இது நம் உடலில் கால்சியம் உண்டாக்க உதவுகிறது.
 
காலை நேர சூரியக் குளியலே சிறந்ததாகக் கருதப்படுகிறது, காரணம் பெரும்பாலும் சூரிய ஒளியின் நன்மைகள் அப்போதுதான் கிடைக்கும், மேலும் புற ஊதாக்  கதிர்களும் அந்தளவு வலுவாக இருக்காது. எனவே, தினமும் காலை 15 நிமிட சூரியக்குளியல் பெற்று ஆரோக்கியமாக இருப்போம்.