Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களும் அதன் சத்துக்களும்...!

Updated: திங்கள், 8 ஏப்ரல் 2019 (11:06 IST)
 
பேரிக்காய்: பற்கள், எலும்புகள் பலப்படும். இதயம் வலுவாகும், இரைப்பை, குடல், சீரண உறுப்புகள் வலுப்பெறும்.
 
நாவல்பழம்: கல்லீரல் கோளாறு நீங்கும். குடல்புண்ணை அகற்றும். நீரிழிவுக்கு அருமருந்து.
 
கொய்யா:செரிமானத்துக்கேற்ற நார்ச்சத்தை கொண்டுள்ளது. இதனால் மலச்சிக்கல் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் பொதுவாக மலச்சிக்கலால் பாதிக்கப்படுவர். இப்பழங்களில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. 
 
பேரீச்சம்பழம்: ரத்த விருத்தியாகும். சருமம் பளபளப்பாகும். கண் கோளாறுகள் வராது. இருமல், கபம் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல மருந்து.
 
சத்துக்குடி: பசியைத் தூண்டும், மூளைச் செல்களை பலப்படுத்தும். ரத்த அழுத்தத்திற்கு நல்லது. கர்ப்பப்பையை பலமாக்கும்.
 
பப்பாளி: சிறுநீர் கல்லடைப்புக்கு அருமருந்து, நரம்புகள் பலமாகும். ஆண்மை விருத்தியாகும். ஞாபக சக்தி மேம்படும். மாதவிடாய் கோளாறுகள்  நீங்கும்.
 
சீதாப்பழம்: மலச்சிக்கல் நீங்கும். பருக்களை அகற்றும். தலைமுடி மிருதுவாகும். பேன், பொடுகு தொல்லையில் இருந்து தலைமுடியை பாதுகாக்கும். குளிர்காய்ச்சல் நீங்கும். இதயம் பலப்படும்.
 
ஆரஞ்சு: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். வாழ்நாளில் இளமைக்காலத்தை நீட்டிக்கும். பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும்,  பல் சொத்தை வராது.

எல்லாம் காட்டு

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

சாப்பிட்டா நோயே வராது!.. சிறு தானியங்களின் பெரு நன்மைகள்!..

உணவு சாப்பிட்டவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments