நோய்கள் நம்மை விட்டு நீங்க சில பயன்தரும் இயற்கை வைத்திய குறிப்புகள்...!

நாயுருவி இலையை பத்து கிராம் அளவு எடுத்து மைய அரைத்து அதை, பத்து மிலி நல்லெண்ணையுடன் குழப்பி காலை, மாலை என இரு வேளை பத்து நாட்களுக்கு உண்டுவர இரத்த மூலம் குணமாகும். 
தொண்டையில் சளி கட்டிக்கொண்டு தொல்லை தருகிறதா? டோன்ட் ஒர்ரி. ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் ஓமத்தை போட்டு  கொதிக்கவைத்து பருகிவந்தால், விடுதலை!
 
தினமும் ஐம்பது கிராம் வெங்காயத்தை பச்சையாக உண்டுவந்தால் இதய நோய்கள் நம்மை விட்டு ஓடிவிடும். இளமை திரும்ப வரும்.
 
கீரை வகைகள், முட்டை, பால், இறைச்சி, பேரீச்சம் பழம், போன்றவற்றை உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தசோகை  ஏற்படாமல் தடுக்க முடியும்.
 
தினந்தோறும் உணவில் காய்கறிகளையும், கீரை வகைகளையும் அதிகமாக சேர்த்துக்கொள்ளுங்கள். இது மலச்சிக்கல் ஏற்படாதவாறு  பார்த்துக்கொள்ளும். 
 
செக்கில் ஆட்டிய கடலெண்ணை, நல்லெண்ணையை சமையலுக்கு பயன்படுத்துங்கள். வாயை மூடிக்கொண்டு உணவை நன்றாக மென்று  விழுங்குங்கள். இதை செய்து வந்தாலே சர்க்கரை நம்மை விட்டு காத தூரம் ஓடிப்போகும்.
 
இரைப்பையில் அமிலச்சுரப்பு மிகுதியால் இரைப்பை புண் உண்டாகும். இதன் காரணமாக வயிற்றில் வலியும், எரிச்சலும் ஏற்படும். இதற்கு  வெண்பூசனிக்காய் 150 கிராம் அளவில் எடுத்து தோல் சதையுடன் மிக்ஸியில் அரைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர  குணமாகும்.
 
வயது முதிர்ந்த வேப்பமரப் பட்டை, அத்திமரப் பட்டை, ஆலமரப் பட்டை, நாவல் மரப் பட்டை ஆகியவைகளின் சூரணங்களில் சம அளவு எடுத்து கலந்து வைத்துங்கொண்டு தினமும் காலை வெறும் வயிற்றில் 5 கிராம் சூரணத்தை கஷாயமிட்டு பருகிவர சர்க்கரை நோய்  கட்டுப்படும். சர்க்கரையால் இளைத்த உடல் தேறும்.


இதில் மேலும் படிக்கவும் :