இந்த மூலிகையில் இத்தனை அற்புத மருத்துவ குணங்கள் உள்ளதா...!!
சிவகரந்தை மூலிகை கல்லீரல் நோய்கள், இருமல், மூலம், அஜீரணம், தோல் நோய்கள், காமாலை போன்றவற்றிற்கு சிறந்தது. நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து அழற்சியைக் குறைக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.
தேரையர் சித்தர் சித்த மருத்துவத்தில் சிவகரந்தை மூலிகையை பற்றி கூறியுள்ளார். சிவகரந்தைச் செடியை வேருடன் எடுத்து நிழலில் உலர்த்தித் தூளாக்கி, குன்றிமணி எடை ஒன்று முதல் நான்கு வரையில் எடுத்து துணை மருந்தாக தேன், நட்டுசர்க்கரை, நெய் அல்லது வெண்ணெய்யுடன் காலை, மாலை இரு வேளையும் உண்டு வர, இரத்தம் சம்மந்தமான வியாதிகளெல்லாம் தீர்த்து இரத்தத் சுத்தியாக்கி தேகதிடம்.. தேகபலம்..தேகவசீகரம் முதலியவை உண்டாகி ஆத்ம சக்தி விருத்தியாகும்.
இதனை எல்லா நோய்களுக்கும் உபயோகிக்கலாம். முதல் மாதம் உடல் நாற்றம் நீங்கும். இரண்டாம் மாதம் வாத நோய்கள் நீங்கும். மூன்றாம் மாதம், பித்த நோய்கள் நீங்கும். நான்காம் மாதம் தோல் நோய்கள் நீங்கும். ஐந்தாம் மாதம் பசி கூடும். ஆறாம் மாதம் அறிவும் தெளிவும் உண்டாகும்.. ஏழாம் மாதம் உடல் வனப்பு உண்டாகும். எட்டாம் மாதம் உடல் தோல் உரியும். ஒன்பதாம் மாதம் நரை, திரை, பிணி நீங்கும். சிவகரந்தையில் சிகப்பு பூ கந்தக சத்து உடையது.
சிவகரந்தையை பூ பூப்பதற்கு முன்பு பிடுங்கி நிழலில் உலர்த்தி இடித்து சலித்து வைத்துகொள்ள வேண்டும். அத்தோடு கரிசலாங்கண்ணி இலையையும் உலர்த்தி பொடி செய்து சிவகரந்தை பொடியுடன் சமமாக கலந்து தினசரி காலை மாலை இருவேளையும் சுத்தமான பசு நெய்யில் கலந்து ஒரு மண்டல காலம் சாப்பிட்டு வந்தால் இளநரை கண்டிப்பாக மறைந்து முடி கருமையாக மாறும்.
Edited by Sasikala