Daily Horoscope

முறிந்த எலும்புகளை விரைவில் சேர்வதற்கு உதவுமா பிரண்டை..?

Written By Sasikala
Updated: புதன், 30 ஜூன் 2021 (18:11 IST)
 

பிரண்டை மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம் வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த குணமுடையது. பாக்டீரியா, வைரஸ்  போன்ர கிருமிகலால் ஏற்படும் நோய்களையும், ஜீரம் போன்றவையும் ஏற்படாமல் தடுக்கும் தன்மை பிரண்டைக்கு உண்டு.
 
காதுவலிக்கும், காதில் சீழ்வடிதலுக்கும் பிரண்டையை தீயில் வதக்கி சாறு பிழிந்து இரண்டு துளி காதில் விட்டு வர குணம் தெரியும். 
 
மூக்கில் வடியும் ரத்தம் நிற்க இந்தச் சாற்றை இரண்டு அல்லது மூன்று துளி மூக்கில் விடலாம், இந்தச் சாற்றையே தகுந்த அளவில் உள்ளுக்குக் கொடுத்து  வரபெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும்.
 
முறிந்த எலும்பு விரைவில் சேர்வதற்கு இதன்வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் வீதம் உண்டு வரலாம் இதனை வெந்நீரில் குழைத்து பற்றிட்டும் வரலாம்.  பிரண்டைத் தண்டை எடுத்து சுண்ணாம்பு தெளி நீரில் ஊறவைத்து வேளைக்கு ஒன்றாக உட்கொண்டு வந்தால் நல்ல பசி ஏற்படும்.
 
வயிற்றில் வாயு கோளாறு ஏற்பட்டு அவதியுறுபவர்கள் வாரம் ஒருமுறை அல்லது ஒருமுறை பிரண்டை துவையலை சாப்பிட்டு வந்தால் வாயுத்தொல்லை, அஜீரண  கோளாறுகள் போன்றவை நீங்கும். குடலில் தங்கியிருக்கும் அழுக்குகள் மற்றும் நச்சுக்களை நீக்கி சுத்தப்படுத்துகிறது.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments