செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சுவையான கொத்தமல்லி சாதம் செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:
 
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 1 1/2 கப்
எண்ணெய் - தேவைக்கு
அரிசி - 1 1/2 கப்
 
அரைக்க தேவையான் பொருட்கள்:
 
கொத்தமல்லி தழை - 1 கட்டு
பூண்டு - 5 பல்
உப்பு - ருசிக்கேற்ப
பச்சை மிளகாய் - காரத்திற்கேற்ப

செய்முறை:
 
* அரிசியை முதலில் வேகவைத்து உதிரியாக வடித்து ஆறவைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
 
* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்து பின் வெங்காயத்தை போட்டு நன்றாக சிவக்கும் வரை வறுக்கவும்.
 
* வெங்காயம் வதங்கியம் அரைத்த மசாலாவை வாணலியில் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். எண்ணெய் ஓரங்களில் வர ஆரம்பித்தவுடன்  சாதத்தை போட்டு கிளறி இறக்கி பரிமாறவும். சுவையான கொத்தமல்லி சாதம் தயார்.