Daily Horoscope
✕

வெங்காயத்தாளில் எந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது தெரியுமா...?

Written By Sasikala
Updated: புதன், 31 மார்ச் 2021 (18:41 IST)

இந்த காய்கறிகளிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை நோயிலிருந்து பாதுகாக்கிறது. வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
 
வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது. வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவைகள் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றது.
 
வெங்காயத்தாள் இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் மற்றும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வெங்காயத்தாள் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது.
 
வெங்காயத்தாளில் உள்ள குரோமியம் சத்து நீரிழிவு நோய்க்கான சுகாதார நலன்களை வழங்குகிறது. இது இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் ஊட்டச்சத்து தன்மையை அதிகரிக்கிறது.
 
வெங்காயத்தாளில் உள்ள அமிலமானது, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வெங்காயத்தாளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை எதிர்த்து போராட உதவுகிறது.

எல்லாம் காட்டு

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments