வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பாலக்கீரையில் உள்ள அற்புத சத்துக்களும் பயன்களும் !!

பாலக்கீரையில் வைட்டமின் A அதிக அளவில் உள்ளதால் மாலைக்கண் மற்றும் கண்களில் அரிப்பு ஏற்படுதல் போன்றவற்றை வராமல் தடுக்க உதவுகிறது.

பாலக்கீரையில் இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், போலிக் அமிலம், கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன. பாலக்கீரையில்போலிக் அமிலம் அதிகளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது. 
 
குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களும் இதனை சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்க உதவுகிறது. பாலக்கீரையில் மெக்னீசியம், காப்பர் மற்றும் வைட்டமின் கே அதிகளவில் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகிறது.
 
இக்கீரை இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதால் அனிமீயா நோய் வராமல் இருக்க உதவுகிறது. பாலக்கீரையின் சாற்றை வடிகட்டி 3 துளி காதில் விட்டால் காதில் இரைச்சல் இருப்பதைக் குணப்படுத்தும்.
 
ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது.
 
இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது, ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது. பாலக் கீரையானது புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுத்து நிறுத்த கூடியது.
 
பாலக்கீரை இலைச் சாற்றுடன், சீரகம் 5 கிராம்,பூண்டு இரண்டு பல் ஆகியவற்றை அரைத்து மூன்று சம பாகமாகப் பிரித்து வடிகட்டி மூன்று வேளை சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.