1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (12:40 IST)

என்னவெல்லாம் மருத்துவ குணங்களை கொண்டது மரிக்கொழுந்து தெரியுமா...?

Marikozhunthu
சருமத்தில் தொற்றுக்களால் ஏற்படும் பாதிப்புகள், சிறுநீரக கோளாறுகள், உடல் வலி, தூக்கமின்மை மற்றும் வயிற்று பாதிப்புகளைப் போக்கி, உடலை நலமாக்கக் கூடியது.


மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடியின் நிறம் மாறும். மாலை, கதம்பம் இவற்றில் வாசனைக்காக மரிக்கொழுந்து சேர்க்கப்படுகிறது.

மரிக்கொழுந்துகள் அழகு சாதனைகள், நறுமணபொருட்கள், புகையிலை மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுகின்றன.

மன நிலை சார்ந்த மன உளைச்சல், மன வேதனை பாதிப்புகளை சரி செய்து, மன நிலையை சீராக்கும் ஆற்றல் மிக்கது, மரிக்கொழுந்து. உடல் நல பாதிப்புகளுக்கு தீர்வாகும் மரிக்கொழுந்து.

உடலுக்கு கெடுதல் செய்யும் வியாதிக் கிருமிகளை அழிக்கும் மரிக்கொழுந்து, சருமத்தில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றுகளுக்கு, மருந்தாகிறது. உடல் வீக்கங்கள் கட்டிகள் தரும் வலியைப் போக்கி, அவற்றை சுருங்க வைக்கிறது. மன நல பாதிப்புகளுக்கு ஆற்றல்மிக்க, நிவாரணமாகத் திகழ்கிறது.