வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : புதன், 25 மே 2022 (10:51 IST)

களாக்காய் சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் தெரியுமா...?

Kalakai
களாக்காயை ஊறுகாய் ஆகி உணவுடன் அடிக்கடி சேர்த்துக்கொள்ள பசியின்மை சுவையின்மை பித்தம், பித்தத்தினால் வரும் குமட்டல் போன்றவை குணமாகும்.  இது தாகத்தை தணிக்கிறது.


களாக்காய் மற்றும் புளிப்பு சுவையுடையது. பூ, காய், பழம், வேர் ஆகியவை மருத்துவ  குணம் கொண்டவை.

களாக்காயின் வேரை பொடிசெய்து சர்க்கரை கலந்து 3 கிராம் காலை மாலை இருவேளை உண்டுவர பித்தம் தாகம் வியர்வை பிரச்சனை போன்றவை குணமாகும். இதனால் குணமாகும் இதர நோய்கள் கண்நோய் கண்ணில் ஏற்படும் வெண்படலமும், கரும்படலம், ரத்தப் படலம், சதை படலம் போன்ற நோய்கள் குணமாகும்.

காய், பழம், ஆகியவை  பசியை தூண்டும். தாதுக்களின்வெப்பு தணிக்கும்,  சளியை அகற்றும், மாத விலக்கைத்தூண்டும்.

இதனுடைய வேரை 50 கிராம் எடுத்துக்கொண்டு அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும் .அந்தத் தண்ணீர்  100 மில்லி ஆக சுண்டக் காய்ச்சிய பின் எடுத்து வடிகட்டி காலை மாலை இருவேளையும் 50மில்லி எடுத்துக்கொண்டால் கருப்பையில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.