வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

நீரழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் கோவைக்காய்...!

கோவைக்காய் இலை இருமல், ஆறாத புண்கள், சிரங்கு, உடல் சூடு, நீர்ச் சுருக்கு ஆகியவற்றைப் போக்கும். கோவைக்காய், கரப்பான், ஜலதோஷம், நீரழிவு போன்ற நோய்களுக்கு மருந்தாகும். கோவைக்காய் வேர், குஷ்டம், பிரமேகம், வாத நோய்கள் ஆகியவற்றுக்கு மருந்தாகும்.
சர்க்கரை நோயாளிகள் தினமும் கோவைக்காயை சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அனைத்துக் கடைகளிலும் மிக எளிதாகக் குறைந்த விலையில் கிடைக்கும் கோவைக்காய் நார்ச்சத்து நிரம்பியது அதை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிடலாம்.
 
கோவைக்காயில் வைட்டமின் ஏ 156 மைக்ரோ கிராம், போலிக் அமிலம், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன. இவை கண்  குளிர்ச்சியை உண்டாக்கும். இலைச்சாற்றுடன் வெண்ணெய் சேர்த்து சிரங்குகளுக்கும் பூசலாம். இதன் இலைச்சாRறை பருகி வந்தால் நீரழிவு நோய் கட்டுப்படும்.
 
கோவைக்காயில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டுமுறை கோவைக்காயை சேர்த்து கொள்ளலாம். கோவைக்காயில்,  சாம்பார், கூட்டு போன்றவை செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர வயிற்றுப் புண், வாய்ப்புண், உதடு வெடிப்பு ஆகியன குணமாகும்.
 
கோவைக்காய் இலைச் சாறு 20மிலி உடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து ஒரு டம்ளர் நீராகாரத்துடன் கலக்கி காலையில் மட்டும் குடித்து வர வேண்டும்.  7 நாட்கள் வரை சாப்பிட வெட்டை நோய் குணமாகும்.
 
கோவைக்காய் இலைச் சாற்றை சம அளவு தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து, வடிகட்டி வைத்துக் கொண்டு, மேல் பூச்சாகப் பூச வேண்டும். மேலும் ஒரு பிடி இலையை ஒன்றிரண்டாக நசுக்கி இரண்டு டம்ளர் நீரில் இட்டு பாதியாக காய்ச்சி, வடிகட்டி குடிக்க வேண்டும். 7 நாட்களுக்கு காலை, மாலை  வேளைகளில் இவ்வாறு செய்து வர படை, சொரி, சிரங்கு போன்றவை குணமாகும்.
 
கோவைக்காய் இலைச் சாறு, காலை, மாலை 50 மிலி அளவு 4 நாள்கள் குடித்து வர சீதபேதி குணமாகும். கோவைக்காய் வேர்க்கிழங்கு சாறு 10 மிலி காலையில் மட்டும் குடித்து வர ஆஸ்துமா குணமாகும்.